Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, April 16, 2005

ருத்ர பூமி


அது ஒரு போர்க்களம். குவிந்து கிடக்கும் போர்க்கருவிகளும், உக்கிரமான சண்டையின் மிச்சங்களும் பரவியிருந்தன; எங்கும் புகை-ஒரு வித தீய்ந்த நாற்றம். கலப்படமாகக் கூச்சல்கள். அங்குமிங்கும் ஒரு வித கையாலாகாத்தனத்துடன் போருக்குத் தப்பியவர்களைக் காப்பாற்றும் சில உத்தம உயிர்கள். இனிமேலும் இப்படியொரு கொடுமையை எப்போதும், எங்கும் நடக்கவிடக்கூடாது என்று ஆயிரமாவது முறையாக நினைக்கும் தலைவர்கள். 'இதிலிருந்து எப்போது மீளப்போகிறோம்?' என்று கவலையிலாழும் இன்னபிற ஜீவன்கள்...

...அப்பா சமைத்து முடித்தபின் உருவெடுக்கும் நிலவரம்.

என் தந்தையாரின் சமையல் செஷன்களின்போது, அருகிலிருந்து பார்த்து [உதவி], நான் அறிந்துகொண்ட அரிய பெரிய தகவல்கள்...

1. இருப்பதிலேயே மிகக் கடினமான, சாமானியத்தில் செய்துமுடிக்க முடியாத, சமையல் புத்தகத்தில் பக்கம் பக்கமாக நீளும் உணவு வகைகளையே தேர்ந்தெடுப்பார். ["அதான் குழம்பு ரசமெல்லாம் தெனமும் செய்யறமில்ல?" - அசைக்க முடியாத லாஜிக்.].

2. மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் வழி வந்த லட்சியவாதி. 'சமையல் என்னும் இமயத்தை ஒரே நாளில் வென்று விடலாம்' என்று தீர்மானமாக நம்பும் அசாத்திய தீரமும் வீரமும் படைத்தவர்.

3. சமையலறையில் பயன்படும் பாத்திரங்கள் அத்தனையையும் கடை பரத்திவிட வேண்டும் என்பது 'அப்பா சமையல் செஷன்'களின் எழுதப்படா விதி. அரியது, பெரியது, சிறியது என்று மேடை கொள்ளாமல், கல்யாண சீர் வரிசை ரேஞ்சுக்குப் பாத்திரங்கள் நிரம்பி வழியும் [அப்போதுதான் உள்ளேயே நுழைய முடியாமல் கூஜாக்களின் மீதும், அடுக்குகளின் மீதும் தடுக்கி விழலாம்.]

4. தோராயமாக 10.4569123 விநாடிகளுக்கு ஒரு முறை எங்களிடம் "இப்ப புளியைக் கரைக்கணுமா, கடுகு தாளிக்கணுமா?" என்று கேள்வி எழுப்பப்படும். அதனால் வேறு காரியங்களில் ஈடுபடாமல், சமையலறைக்கு வெளியே, பத்தடி தூரத்தில் 'உதவிக்கு' அமர்ந்திருப்பது நலம்.

5. சமையலறைக்குள்ளேயே 'உதவி' செய்வது ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. [அப்போது சமையல் 'ஆபரேஷ'னில் நாமும் கலந்துகொண்டதாக அர்த்தம் வந்துவிடும்.]

6. இதற்காகத் தொலைவில் [அதாவது ஹால், அவரவர் அறை] சென்றுவிடக்கூடாது. "நான் இங்கே கிடந்து அல்லாடறேன்; உங்களுக்கெல்லாம் டீவி கேக்குதோ?" என்பன போன்ற கூச்சல்கள் செவிப்பறையைக் கிழிக்கும். [காதில் பஞ்சு வைத்துக்கொள்வது unacceptable.]

7. அவ்வப்போது எழும் காரசாரமான அதட்டல்கள் ["கிச்சனை இப்படியா வெச்சுக்கிறது? எது எங்க இருக்குன்னு ஒண்ணுமே புரியலை..."]

8. கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம், மற்றும் சுவரெங்கும் எண்ணேய் தீற்றல்கள் ["சீடை செய்யிறது ரொம்ப ஈஸி இல்லை?"], மேடை முழுவதும் குழப்படியான வழவழப்பு ["நல்லெண்ணெய் கொட்டிப்போச்சு..."], ஒரு வித இனம் காண முடியாத அபூர்வ வாடை ["அதான் என்னன்னு எனக்கும் தெரியலை..."]

9. "வாசனை வருதா?" என்று சில நிமிடங்களுக்கொரு முறை [மிக ஆவலாகக்] கேள்வி எழுப்பப்படும். இதற்குக் பட்டுக்கொள்ளா¡மல், ஒரு மையப் புன்னகை புரிந்துவிட்டு, "ரொம்ப நல்லா இருக்கு," "அட, நல்லாயிருக்கே..." என்னும் பதில்களைத் தரவேண்டும். [ஒரேயடியாக "அற்புதம், சூப்பர்," என்று உளறிக்கொட்டாமல் இருப்பது பிற்காலத்தில் நன்மை பயக்கும். "என்ன வாசனை?" "என்னவோ தீயுது," போன்ற பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.]

10. 'சமையல்' முடிந்த பிறகு [இதற்கு குறைந்தது மூன்று மணி நெரமாவது ஆக வேண்டும்; சமையலறையிலிருந்து வெற்றிப்பெருமிததுடம் அப்பா புறப்படுவார்] - எல்லாவற்றையும் தகுந்த பாத்திரங்களில் மாற்றி, டேபிளில் அடுக்க வேண்டும் [நாங்கள் யாரும் டேபிளில் சாப்பிடுவதில்லை].பிறகு எல்லோரும் அணிவகுத்து நின்று, சமையலை ருசி பார்க்க வேண்டும். ["நான் அப்புறம் சாப்பிடறேன்..."]

11. சமைத்த எல்லாவற்றையும் [அவை நம்மளவு பெரிய அடுக்குகளில் இருந்தாலும்] பத்தாவது நிமிடம் காலியாக்க வேண்டும்.

12. "நீயே தெனமும் சமைக்கலாம்," என்று பாராட்டுப் பத்திரம் அவசியம் கொடுக்க வேண்டும்.

13. இப்பாராட்டுப் பத்திரத்தை நிஜமாக்காமல் இருக்க பெருமுயற்சி எடுக்க வேண்டும். ["அன்னிக்கு சாப்டதே இனிக்கும் நாக்குல நிக்குது..."]

14. அதையும் மீறி உள்ளே நுழைந்தால், எமெர்ஜென்சி உத்திகள் கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

15. இவையெல்லாவற்றையும் மீறி, அத்தனை போர்க்கால நடவடிக்கையையும் தாண்டி, (அம்மா சமையல் போல் இல்லாவிட்டாலும்) எனக்குப் பிடித்த உணவுகளாகவே சமைக்கும் அப்பாவின் சமையலில் ஒரு வித ருசி இருக்கத்தான் செய்கிறது என்பதை மனம் உணர, அதை நினைத்து அதிசயப்பட வேண்டும்.

Yup. இன்று அப்பா சமையல்.
|

21 Comments:

  • At 1:42 PM, Blogger ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said…

    Kalakkal posting !

     
  • At 2:28 PM, Blogger Pavithra Srinivasan said…

    Nandri, jayanthi :-)

     
  • At 4:22 PM, Anonymous Anonymous said…

    doe he read this.what is his view on your cooking.pls post that also

     
  • At 7:36 PM, Blogger Voice on Wings said…

    //இனிமேலும் இப்படியொரு கொடுமையை எப்போதும், எங்கும் நடக்கவிடக்கூடாது என்று ஆயிரமாவது முறையாக நினைக்கும் தலைவர்கள்//

    தலை'வி'களைக் குறிப்பிடுகிறீர்களா? அது சரி, கூசாம எங்க சமையல கிண்டல் பண்றீங்களே, நாங்க மட்டும் உங்க வாகனம் ஓட்டும் திறமையைப் பற்றி விமரிசித்தால் stereotyping அது இதுவென்று பொங்கியெழுவது ஏனோ? :)

     
  • At 8:50 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said…

    //இவையெல்லாவற்றையும் மீறி, அத்தனை போர்க்கால நடவடிக்கையையும் தாண்டி, (அம்மா சமையல் போல் இல்லாவிட்டாலும்) எனக்குப் பிடித்த உணவுகளாகவே சமைக்கும் அப்பாவின் சமையலில் ஒரு வித ருசி இருக்கத்தான் செய்கிறது என்பதை மனம் உணர, அதை நினைத்து அதிசயப்பட வேண்டும்.//

    Very true!!!

    I can still remember my dad's fish curry. cooked when i was 10 years old. my first taste of appa's cooking. After that he might have cooked 4-5 times. But that was the best! yum yum.

    A wonderful Post Pavi.

     
  • At 10:09 PM, Blogger Muthu said…

    அசத்தல் பதிவு. சுவாரசியமாய் இருக்கிறது.

     
  • At 12:41 AM, Blogger Jayaprakash Sampath said…

    அட்டகாசமான பதிவு.

    என் இளவயதில், அம்மா ஊருக்கு எங்காவது சென்று விட்டால், எங்கள் வீட்டிலும் இதே போல களேபரம் நடக்கும். கடலைப்பருப்பில் ரசம் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா :-) ? ஆனால், அதை, இத்தனை சுவாரசிமாய்ச் சொல்ல முடியும் என்று தோன்றியதில்லை.

     
  • At 5:22 PM, Blogger Pavithra Srinivasan said…

    Anonymous: Certainly he read it. He was the one who told me to post :-)

     
  • At 5:40 PM, Blogger Pavithra Srinivasan said…

    Voice on Wings:
    நான் எங்கே கிண்டல் செய்தேன்? நான் பார்த்ததை அப்படியே எழுதினேன் :-))))))))). Besides, நான் நன்றாக வாகனம் ஓட்டுவதாக சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டேன். :-)

    BTW, are you a 'Sting' fan?

     
  • At 5:52 PM, Blogger Pavithra Srinivasan said…

    Mathy: Thank you. Glad you liked it.:-)

    Muthu: Thanks :-))

     
  • At 6:00 PM, Blogger Pavithra Srinivasan said…

    Icarus: கடலைப் பருப்பு ரசம்??!! Weird :-)) Looks like you have some strange encounters to share, yourself. :-)

     
  • At 9:27 PM, Blogger சன்னாசி said…

    நல்ல பதிவு....
    //BTW, are you a 'Sting' fan?//
    அவர் எப்படியோ!; I am.

     
  • At 9:27 AM, Blogger Agnibarathi said…

    Reminded me of the Uncle Podger hanging a picture sequence from Three Men in a Boat!!

     
  • At 10:19 AM, Blogger Pavithra Srinivasan said…

    மாண்ட்ரீஸர்: Thank you. You're a 'Sting' fan? Wow. It's been a long time since I met one who was :-)

    Agnibarathi: Hit the nail right on the head :-) - yep, it does resemble something like that, doesn't it?

     
  • At 11:57 AM, Blogger Voice on Wings said…

    ஓ சர்டிஃபிகேட்டே வாங்கிட்டீங்களா? நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகமாயிடுச்சின்னு பேசிக்கறாங்க. காரணம்தான் தெரியல ;)

    பெரிய அளவுல Sting ரசிகனெல்லாம் கிடையாது. நான் வழிபடும் மற்ற கடவுள்களெல்லாம் இருக்கிறார்கள். ஏதோ, அவருடைய சில பாடல்கள் பிடிக்கும் (Roxanne, Every breathe you take, Desert Rose......) Why the doubt?

     
  • At 9:31 AM, Blogger Agnibarathi said…

    Ahem, I have now entered the final step of my bachelorhood - samiyal practise. You are welcome anytime at my home - I'm an expert in making hot water now!!! ;-)

     
  • At 5:11 PM, Blogger Pavithra Srinivasan said…

    Voice on Wings: Eh. sorry I took so long to reply. As for doubts...no. No doubts. :-))

     
  • At 5:18 PM, Blogger Pavithra Srinivasan said…

    Agni: What? to drink hot water? What's so special about the water you 'cook', that's different from others?? :-)

     
  • At 5:22 PM, Blogger Pavithra Srinivasan said…

    Selvanayaki: Mikka nandri :-)

     
  • At 11:06 AM, Blogger Agnibarathi said…

    Kai maNam endRu oru vishayam irukku... to put in a slightly more poetic fashion, nAn vennIr vaithAl athu pannIr mAthiri irukkum!!! ;-) (EthO thlaivar pada dialogue mAthiri vanthu vittadhu...mannikavum!!)

     
  • At 4:54 PM, Blogger வீ. எம் said…

    one of the nice posting i read in recent past !
    good one !

    V.M

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home