Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, January 20, 2007

"ஆரார் ஆசைப்பட்டால் என்ன ...?"

சென்னையின் இசை விழாவில் முழுகி நனைந்து இப்போதுதான் வெளியே வந்து மூச்சிழுக்கிறேன். மற்ற வருடங்களில் செய்யாத ஒரு சில (சிறிய) விஷயங்களை இந்த வருடம் செய்ய முடிந்தது. உதா: அலுவலகத்தையும் தாண்டி எப்படி கச்சேரிகளுக்குச் சென்று வருவது என்று திட்டமிடுதல். எந்த ப்ளானும் இல்லாமல் ஒரு விஷயத்தில் தடாலென்று இறங்குவதுதான் எப்போதும் கை கொடுக்கிறது என்பதற்கு டிசம்பர் 2006 மற்றொரு எடுத்துக்காட்டு.

அப்படி ஒரு "புதிதாகச் செய்யும் முயற்சி"யில்தான், கலாஷேத்ராவிற்குச் சென்றேன். இரண்டு மூன்று நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்தேன். கூடவே, "கூர்மாவதாரம்" நிகழ்ச்சிக்கு முன், அவர்களுடைய கேரள பாணி "கூத்தம்பலம்" அரங்கில், பிரசன்னா ராமஸ்வாமியின் "ஆரார் ஆசைப்படார்" short filmஐயும் பார்க்க நேர்ந்தது.

மாலை ஐந்து மணி. வெளியே மரங்களின் 'மரமர' சப்தம். கொசுக்கள் ரீங்காரமிட்டன. அவற்றை விரட்டும் சாம்பிராணிப் புகையின் நறுமணம். சற்று கண்ணை மூடினால் இரண்டு நூற்றாண்டுகள் பின்னோக்கி வந்துவிட்ட பிரமை தட்டுகிறது. Ambienceஇல் தூக்கியடிக்கிறார்கள்.

படம் ஆரம்பித்தவுடன், சஞ்சய் சுப்ரமணியத்தின் அற்புதக் குரல் சில நிமிடங்கள் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது. நளினமான இசை.

அதற்கப்புறம் கொட்டாவி வருவதைத் தடுக்க முடிவதில்லை.

பாடகர், குழந்தைக்கு அன்பான அப்பா, கணவர், வயது முதிர்ந்த இசைக்கலைஞரிடம் பாட்டுக் கற்றுக்கொள்ளும் பணிவான மாணவர் என்று சஞ்சயின் வெவ்வேறு பரிமாணங்களைக் கட்ட முயன்றிருக்கிறார்கள். புரிகிறது. அவர்களது முயற்சி பாராட்டுக்குரியதுதான். ஆனால் ... இயற்கையாக எடுக்கிறேன் என்ற பெயரில் கேமரா ஓவராக ஆடுவதாகத்தான் எனக்குப் படுகிறது. இயல்பான வாழ்க்கையைக் காட்டுவதாகச் சொல்லி சஞ்சயின் மனைவி தோசை வார்ப்பதைப் பதினைந்து நிமிடம் படமெடுக்க வேண்டிய அவசியம் புரியவில்லை.

தன் இசை, அவரது அனுபவங்கள், அவர் தன் துறையைப் பார்க்கும் விதத்தைப் பற்றியெல்லாம் சஞ்சய் விவரிக்கும் இடங்கள் மிக நன்றாக இருக்கின்றன. கண்களை உருட்டி உருட்டி அவர் இன்வால்வ் ஆகி மூழ்கிப்போவது மிக சுவாரசியமாக இருக்கிறது. உடனேயே அவர் ஜன்னல் பக்கம் நின்று தெருவை வேடிக்கை பார்க்கிறார். ஆழ்ந்த இசைத் தியானத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம் - ஆனால் பார்க்கும் நமக்கு அந்த உணர்வு வரவில்லை. தப்பாக எடிட் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம்தான் வருகிறது. பின்னால் ஒரு தாமரை மலர்வதாக (பழைய சிவாஜி படத்திலெல்லாம் காண்பிப்பார்களே) ஒரு காட்சி. Subtlety, where art thou? தமாஷாக இருந்தது.

சஞ்சய் பாடிக்கொண்டே இருக்கிறார். குழந்தையுடன் விளையாடுகிறார். திடீரென்று காருக்குள் இருக்கிறார். ஒரு சமயம் வாய் மட்டும் தெரிகிறது. பாட்டுக் கற்றுக்கொள்கிறார் (அவரது பணிவும் பக்தியும் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கின்றன.) வாயில் எதையோ குதப்புகிறார்.

பிய்த்துப் பிய்த்துப் பல காட்சிகள். இதுதான் டாக்குமெண்ட்ரி ethicஸோ என்னவோ. ரோட்டில் போகும்போது குலுக்கிப்போடும் தெருக்குழிகளை நினைவுபடுத்துகின்றன பல காட்சியமைப்புக்கள். சஞ்சய் என்ற அற்புதப் பாடகரின் பல முகங்களைக் காட்ட முயன்றிருக்கிறார்கள் ... சஞ்சய் என்ற தனிப்பட்ட மனிதரின் sheer charisma படத்தை ஓட்டுகிறது. மற்றபடி?

ஒரு பெரிய பங்களாவையே திறந்து காட்டுகிறேன் என்று ஆசை காண்பித்துவிட்டு, கதவிடுக்கில் சிந்தும் ஒளியை மட்டுமே மீண்டும் மீண்டும் focus செய்திருக்கிறார்கள். Rather disappointing.

Labels: ,

|

1 Comments:

  • At 8:59 PM, Blogger cos said…

    Clear capture :) ....why therez no blog postings nw days pavithra?

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home