Shangri - La

Anything under the sun - in Thamizh!

Friday, November 23, 2007

பூனைக்குட்டி சகாப்தம் - 2



பல வருடங்களுக்கு முன்பு பூனை வளர்த்த கதையை விஸ்தாரமாக எழுதியிருந்தேன். இப்பொழுது மீண்டும் சில மாதங்களாக இரு feline creatures எங்கள் இல்லத்தையே இரண்டு படுத்திக்கொண்டிருக்கின்றன.


ஜெர்சி, ட்ரிசி (திரிபுரசுந்தரி) அகிய இவை இரண்டைப் பற்றிய ஒரு சிறிய வாழ்க்கைக் குறிப்பு (பெயரெல்லாம் அமர்க்களமாய்த்தான் வைத்தோம் - எப்படிக்கூப்பிட்டாலும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்):





வீட்டுச் சிலிண்டரின் கதகதப்பில் பெற்றுப்போட்டுவிட்டு அம்போவென்று அம்மா abscond ஆனபோது:










ஆகா, இரு சிறு ஜீவன்களுக்கு வாழ்வுகொடுத்துவிட்டுத்தான் போவோமே என்று மிகப் பெருந்தன்மையோடு இங்க் ஃபில்லர் சகிதமாக ஏகமாக ஆரோக்யா பால் கொடுத்ததில் மடியைவிட்டு இறங்கமாட்டேன் என்று அடம் ...



கொஞ்சம் விவரமறிந்து பேப்பரெல்லாம் கிழித்து, லேப்டாப் மேலெல்லாம் குதிக்க அரம்பித்தவுடன், நாங்கள் உட்காரும் நாற்காலியையெல்லாம் அன்னாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது ...





நிலைமை எவ்வளவு முற்றிவிட்டதென்றால், ஒரு ஃபோட்டோ எடுத்தால் கூட பயங்கரமாக போஸெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

அரசிளங்குமரிகள் வளர்ந்துவிட்டார்கள் - ஆனந்தப் (horrifying) பெருமூச்சு. கோட்டான் பார்வையைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. Any ideas?

|

1 Comments:

  • At 9:22 AM, Blogger The last adam said…

    ROTFL (தரையில் உருண்டபடி சிரிக்கிறேன்??)...back with a bang என்றால் இதுதனா? :DD செம்ம காமெடி!

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home