Shangri - La

Anything under the sun - in Thamizh!

Tuesday, November 20, 2007

ஓமிஸ்வாமியும் மசாலாக்கரண்டியும்


ரொம்ப நாளாயிற்று ...

இந்த மாதிரி ஒரு பூரண மசாலாப்படத்தைப் பார்த்து.

['வலைப்பதித்து' என்று சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்களா? அந்த சால்ஜாப்பெல்லாம் சொல்வதாக இல்லை. அப்புறம் அதற்கென்றே ஒரு பதிவு எழுத வேண்டியிருக்கும்.]

போன வாரம் ஓம் ஷாந்தி ஓம் படம் பார்த்தேன். ஸ்வர்ண சக்தி அபிராமி தியேட்டரை ஜிகுஜிகுவென்று வெல்வெட் குஷனெல்லாம் போட்டு கடைசி சீட்டுக்களை படுக்கையாக மாற்றியிருக்கிறார்களல்லவா, அதைப் பற்றி எழுதப்போயிருந்தேன். தியேட்டர் என்னவோ மஞ்சள்-சிகப்பு-பச்சை என்று 80க்ள்ளின் சினிமா டிஸ்கோவைப் பேய் பங்களா கெட்டப்பில் பார்ப்பதுபோல்தான் இருந்தது. ஆனால் படுக்கை-சீட் அமர்க்களமாக இருந்தது. ஷூவையெல்லாம் கழற்றிப்போட்டுவிட்டு ஹாயாகக் காலை நீட்டிக்கொண்டு, 'என்ன பெரிய படம்,' என்று நினைத்துக்கொண்டுதான் பார்க்க ஆரம்பித்தேன்.

பொதுவாக ஷா ரூக் கான் படங்களென்றால் யோசிக்கும் திறனையெல்லாம் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும் - தமிழ்நாட்டில் போலீஸாக வேலைபார்ப்பவர் பௌலர் ஹாட்டும் ஓவர்கோட்டும் அணிந்துதான் துப்பெல்லாம் துலக்கித் துப்புவார் என்ற எம்ஜிஆர் படத்தை ரசிப்பதுபோல்.

என்றாலும் நான் ஷாரூக் ரசிகை என்பதை வெட்கமெல்லாம் படாமல் intellectual அலட்டல் எதுவும் இல்லாமல் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். லலல்லா ... பாடல் ஒலிக்கும்போது, "கண்ணே, என் இதயம் உன்னுடையது," என்று தி.பாகவதர் கால வசனம் பேசும்போது பார்வையாளர்களை நிஜமாகவே உருக வைக்கும் திறமை மிகச்சிலருக்குத்தான் உண்டு. I salute the ultimate showman of today.

ஒரு முறை பார்த்துப் போதாமல் இன்னொரு முறை பார்த்தேன் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள். [நான் முதல் முறையே தியேட்டர் செல்லும் ரகம் இல்லை.] 70க்களில் சினிமா விஸ்வரூபம் அடைந்திருந்தபோது மீண்டும் மீண்டும் தியேட்டரை மொய்த்துப் படம் பார்த்து, அந்த மாய உலகின் மோகத்தில் மூழ்கியவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பது நன்கு புரிந்தது. அந்தக் கனவுலகம், the sheer screen magic of it ... அதை இந்த ஓவர்டோஸ் matrix உலகத்தில் என்றாவது அனுபவிக்க முடியுமா என்று ஏங்கிய காலம் உண்டு. OSO அந்த அனுபவத்தை எனக்குக் கொடுத்தது.

த்சோ, இன்னொரு OSO விமர்சனமா என்று அலுப்புத்தட்டும் பட்சத்தில் you have been warned: இதோடு கிளம்பலாம்.

ஔவையே! OSOவில் உனக்குப் பிடித்தவைகளை ஒன்று, இரண்டு, மூன்று, என்று வரிசைப்படுத்திப் பாடு என்று கேட்டால், பாடாமல் என்னால் சொல்லக்கூடியவை:

1. சதாகாலமும் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் frame by frame அதைக் கட்டிக்கொண்டு அழாமல், ஒரு வித்தியாசத்திற்கு நம்மூர் பாலிவுட்டை [அதுவே பலவிஷயங்களில் ஹாலிவுட் இன்ஸ்பிரேஷனாக இருந்த போதிலும்]அதன் கோட்டை, கொத்தளம், கத்தி, கபடா, பெல்பாட்டம், தொங்கு மீசை, லெதர் பாண்ட், டென்னிஸ் ஆடும் பெண்கள் என்று கலக்கோ கலக்கு என்று கலக்கிப் பாயசமாக்கியதற்கு.

2. சாபு சிரிலின் ஆர்ட் டிரெக்ஷன். 70க்களின் ஓம் தன் இதய நாயகி ஷாந்திப்ரியாவின் போஸ்டரை நோக்கிக் காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகிலிருக்கும் பில்போர்டுகள், Palmer's Biscuits, Ovaltine, Dulux Paints போன்ற விளம்பரங்களை தத்ரூபமாகக் காட்டுகின்றன. பழைய பைண்ட் புத்தகங்களில் தொடர்கதை படிக்கும்போது அவற்றைப்பார்த்த நினைவு பளிச்சிடுகிறது.

3. ஓம் பிரகாஷ் மகிஜாவாக வரும் ஷா ரூக். இவரது படங்களின் பொதுவான குற்றச்சாட்டு - எப்போதும் அவர் ஷா ரூக்காகத்தான் இருக்கிறாரேயொழிய, கதாபாத்திரமாக மாறுவதில்லை என்பது. இந்த ஒரு இடம் மட்டும் விதிவிலக்கு. பல்லைக் கடித்துக்கொண்டு முன்னேறியதாலோ என்னவோ, கண்களில் கனவு வழிய சினிமாவில் வாய்ப்பு வேண்டி அலையும் இளைஞனின் ஏக்கத்தைப் உண்மையிலே உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். பின் பாதியில் brat-star ஆக வருவதெல்லாம் OK OK தான்.

4. எல்லோரும் ஏற்கனவே பாராட்டியிருக்கும் Filmfare Awards பகுதி. இந்த 'ரா'ஜையும் 'ராகு'லையும் இன்னும் எவ்வளவு நாள்தான் கட்டிக்கொண்டு அழுவார்கள் என்று ஃபாரா கான் எத்தனை முறை தலையில் அடித்துக்கொண்டாரோ?

5. எல்லோரும் சரமாரியாக criticise செய்திருக்கும் பூர்வஜென்மம்-மறுபிறப்பு பகுதி. எனக்குப் படத்தின் ஹைலைட்டே இதுதான் என்று தோன்றியது. 'இந்தக் காதல் நிறைவேறாது' என்று தெரிவதனால்தான் Main agar kahoon பாடலில் அத்தனை சோகமும் இனிமையும் கூத்தாடுகிறது.

6. அந்த 31 ஸ்டார் அணிவகுப்புப் பாடல். பாடல் சுமார் ரகம்தான். ஆனால் பாடலின் கடைசியில் சைஃப், சல்மான், ஷா ரூக், சஞ்சய் தத் எல்லோரும் சேர்ந்து டேபிளின் மேல் ஆடும் பகுதி - ஷா ரூக்கின் முகத்தில் இருக்கும் ஒருவித மலர்ச்சி கலந்த ஆச்சர்யம். ஷா ரூக் கான் என்ற ஒரு புயல் வேக phenomenonஐக் கொண்டாடுகிறார்கள் அவர்கள். 'இதெல்லாம் நமக்கா? நிஜமாகவே இந்தத் திரையுலக பயில்வான்களைக் கட்டியிழுக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துவிட்டோமா? இவர்களெல்லாம் நமக்காகத்தான் இங்கே வந்து ஆடுகிறார்களா?' என்ற ஒருவித மலைப்பு அவர் முகத்தில் வந்து வந்து போகும். பாடல் முழுவதும் அவர்களையே பார்த்துக்கொண்டு ஏறக்குறைய வாய் பிளந்தபடி நின்றுகொண்டிருப்பார்.

7. க்ளைமாக்ஸ் பாடல். அதைப் படமாக்கியிருக்கும் விதம். பழைய நினைவுகளையும் ஷாந்திப்ரியா பரிதாமாக இறந்துபோனதையும் கவிதை கலந்த குரூரத்துடன் சொல்லியிருக்கும் அழகு ... இந்த ஒரு பாடலுக்காக இன்னும் பத்து முறை OSO பார்க்க நான் தயார்.

8. அர்ஜுன் ராம்பால் இத்தனை நாள் எங்கிருந்தார்? ஏன் யாரும் இதுவரை இப்படியொரு அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை?

9. படுகோனே படு க்ளாமராக வந்து கன்னம் குழிவிழ நம்மை அள்ளிக்கொண்டு போகிறார். Dhoomtana பாடலில் பழையகால டப்பாங்குத்து தமாஷாக இருக்கிறது. கடைசிக்காட்சியில் வில்லனை ஒழித்த பிறகு ஷா ரூக்கை துக்கமும் காதலும் கலந்து கண்களில் கண்ணீர் வழிய ஒரு பார்வை பார்க்கிறாரே ... Dreamy Girl பட்டம் மிகப்பொருத்தம். எதிர்காலத்தில் இதைவிட லாஜிக் குறைந்த பல படங்களில் பிகினியில் வந்து, 'பாதகா, விடு என்னை,' என்று சுத்த இந்தியில் பல வசனங்கள் பேசி ஹீரோவின் கையில் தொப்பென்று விழும் சப்பைப் படங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

10. Shreyas Talpade. இக்பால் படத்தில் நடித்த அதே ஆள்தானா என்று நம்புவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. Wow.

OSOவின் மற்ற விமர்சனங்களைப் படித்தபோது கண்ணை உறுத்திய ஒரு விஷயம்: ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் 'இது வெறும் தமாஷ்தான்,' 'ஒண்ணும் கலை வளர்க்கும் படமெல்லாம் இல்லை, இருந்தாலும் ஏதோ பரவாயில்லை,' என்றெல்லாம் சொல்லிவிட்டு அப்புறம் விமர்சனத்திற்குத் தாவியிருக்கிறார்கள். எப்போதுமே ஒரு படம் கலைவளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது என்று புரியவில்லை. கலைப்புலிகளாக தங்களை இவர்கள் நினைத்துக்கொள்வது எதற்கு என்றும் புரியவில்லை. மிக உயர்ந்த சினிமா ஒரு புறம் இமயமலைச்சிகரத்தில் இருக்கட்டும். OSO போன்ற படங்களுக்கும் இங்கே இடம் உண்டு. This is pure entertainment. கட்டக்கடைசியில், எது நிஜவாழ்வின் கஷ்டங்களை மறக்கடித்து கற்பனை உலகிற்கு நம்மை இழுத்துச் செல்கிறதோ, அதுதான் ஜெயிக்கும்.

Paisa Vasool, yaar.

Labels: , ,

|

3 Comments:

  • At 11:37 PM, Blogger Jayaprakash Sampath said…

    இந்தியன் எக்ஸ்பிரஸிலே ரிவ்யூ பார்த்தேன், பட விமர்சனமில்லை, சுவர்ண சக்தி அபிராமி தியேட்டர் விமர்சனம் :-)

    இப்படிதான், ஒரு வாட்டி சிட்டி சென்டர்- இனாக்ஸுக்கு போய் நொந்தே போனேன்.. சீமைக்குள்ளே போனாப்ப்ல ஒரு ஃபீலிங்..லிஃப்ட் ஆப்பரேட்டர் கூட இங்கிலீஸ்ல தான் பேசுவாராம், .ஃபிலிம் காட்டறதுக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு.

    இது எப்படி? நம்பி போகலாமா? :-)

     
  • At 3:35 AM, Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said…

    அடேங்கப்பா!!! உங்களைப் பதிவு போட வச்சதுக்காக்கவே OSOக்கு ஓ. எங்கே தாயே போயிருந்தீங்க? :O)

     
  • At 4:08 PM, Blogger The last adam said…

    ரொம்ப வாஸ்தவமான பேச்சு! இங்க அவன் அவன் செத்துனு இருக்கான், இதுல எல்லா படமும் கலைய வளத்தா பாவம் நம்ம தமிழ் குடிமகன் எங்க போய் முட்டிப்பான்? ஜாலியா timepass பண்ண விடுங்கப்பா!! அக்கா சரியா சொல்லிடேனா அக்கா? :DD

    ஆமாம், எங்க தாயீ ரொம்ப நாளா ஆளையே காணோம்? :)

     

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home