Warning: Random Thoughts.
எது கற்பனை?
சிலருக்குக் கற்பனை கண்களில் விரியும்.
கண்களில் மட்டும்.
சிலருக்கு உள்மனம் வரை செல்லும்.
கற்பனை நிஜமாய் விரியும்.
எதற்குக் கற்பனை? ஏன் கற்பனை?
சிலர் சொன்ன பதில்:
வாழ்க்கையில் முன்னேற.
செல்வம் கொழிக்க.
காதல் கிடைக்க.
குடும்பம் செழிக்க.
உலகம் மதிக்க.
வாழ்க்கையில் முன்னேறி
இவையெல்லாம் கிடைக்க.
எனக்குக் கற்பனை -
இயல்பிலிருந்து விடுதலை.
நிஜத்திலிருந்து தப்பிக்க.
பயங்களிலிருந்து விடுபட.
என் பயங்கள் என்னைத் துரத்தும்போது...
கனவுலகத்தின் கதவுகள் எனக்குத் திறக்கும்.
என் கற்பனை நண்பர்கள் கை கோர்ப்பார்கள்.
ஆத்திரத்தில் எரிந்து விழ மாட்டார்கள்.
துக்கத்தைக் கிளற மாட்டார்கள்.
மகிழ்ச்சியைப் பொறாமையால் கெடுக்க மாட்டார்கள்.
துருவித் துருவித் துன்புறுத்த மாட்டார்கள்.
அவர்களும் என்னைப் போன்றவர்கள்.
என்னைத் தெரிந்தவர்கள்.
என் நிஜ உலக பயங்கள் விலகும் வரை
என்னுடன் இருப்பவர்கள்.
பயம் தெளிந்தவுடன்
புன்னகையுடன் விலகுபவர்கள்.
இப்பொழுதும்...
பயமாக இருக்கிறது.
எது கற்பனை?
சிலருக்குக் கற்பனை கண்களில் விரியும்.
கண்களில் மட்டும்.
சிலருக்கு உள்மனம் வரை செல்லும்.
கற்பனை நிஜமாய் விரியும்.
எதற்குக் கற்பனை? ஏன் கற்பனை?
சிலர் சொன்ன பதில்:
வாழ்க்கையில் முன்னேற.
செல்வம் கொழிக்க.
காதல் கிடைக்க.
குடும்பம் செழிக்க.
உலகம் மதிக்க.
வாழ்க்கையில் முன்னேறி
இவையெல்லாம் கிடைக்க.
எனக்குக் கற்பனை -
இயல்பிலிருந்து விடுதலை.
நிஜத்திலிருந்து தப்பிக்க.
பயங்களிலிருந்து விடுபட.
என் பயங்கள் என்னைத் துரத்தும்போது...
கனவுலகத்தின் கதவுகள் எனக்குத் திறக்கும்.
என் கற்பனை நண்பர்கள் கை கோர்ப்பார்கள்.
ஆத்திரத்தில் எரிந்து விழ மாட்டார்கள்.
துக்கத்தைக் கிளற மாட்டார்கள்.
மகிழ்ச்சியைப் பொறாமையால் கெடுக்க மாட்டார்கள்.
துருவித் துருவித் துன்புறுத்த மாட்டார்கள்.
அவர்களும் என்னைப் போன்றவர்கள்.
என்னைத் தெரிந்தவர்கள்.
என் நிஜ உலக பயங்கள் விலகும் வரை
என்னுடன் இருப்பவர்கள்.
பயம் தெளிந்தவுடன்
புன்னகையுடன் விலகுபவர்கள்.
இப்பொழுதும்...
பயமாக இருக்கிறது.


7 Comments:
At 6:40 PM,
icarus prakash said…
பவித்ரா..... இந்தப் பெயரை எங்கேயோ கேட்டாப்பல இருக்கே :-)
At 6:51 PM,
Pavithra said…
I emerge from hibernation...sometimes.
;)
At 12:21 PM,
lennygibson8060 said…
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. My blog is just about my day to day life, as a park ranger. So please Click Here To Read My Blog
At 4:59 PM,
Gayathri Chandrashekar said…
I read yr blogs.I felt to see sivagamiyin sabadham in translation
being a fan of great kalki.yr poems r nice.I have just started blogging.U can visit my blogs at
http://gayathrichandrashekar.blogspot.com/
At 5:45 AM,
`மழை` ஷ்ரேயா(Shreya) said…
//I emerge from hibernation...sometimes. //
welcome back..
c u in 1 month's time? ;O)
At 10:15 AM,
Pavithra said…
Hi Gayatri, welcome and thanks for your comments. :)
Shreya: Oh God, has it been a month? Okay, then, I'm back. :D
At 3:03 PM,
யாத்திரீகன் said…
கற்பனைக்கு இப்படி ஒரு கண்ணோட்டம் நான் கற்பனை செய்து பார்த்ததில்லை.. :-)) ஆனால் அதுதான் நிஜத்தில் நடக்கிறது
Post a Comment
<< Home