Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, August 24, 2006

ஐந்து விரல்

இன்று காலை, வேலை விஷயமாக வெளியே போயிருந்தப்போது, யதேச்சையாக கலைராணியைச் சந்திக்க நேர்ந்தது. படு கேஷுவலாக, பிங்க் கலரில் பான்ச்சோவும் மணி மாலைகளும் அணிந்துகொண்டிருந்தார்.

நான் வந்த வேலையை மறந்து (ஒரு கணம்) "Oh my God!உங்களை இங்க பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை!" என்று சொல்ல, அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது. 'இங்கே யாருக்கு நம்மை அடையாளம் தெரியப்போகிறது?' என்று நினைத்திருப்பார் போலும்.

கலைராணியை எனக்கு 'தேவதை' நாட்களிலிருந்து பிடிக்கும். அந்தப் படத்தில், கீர்த்தி ரெட்டியிடம் அவர் நாட்டுப்புறக் கதை சொல்வார் பாருங்கள் ... கதையில் தலையில்லாத முண்டமாக வரும் இராட்சசன் ராஜகுமாரியைக் காதலிப்பதாக வரும் இடத்தில், தலையின் மேல் புடவைத் தலைப்பை போட்டுக்கொண்டு அவர் நடித்த நடிப்பில் நிஜமாகவே தலையற்ற முண்டம் ஆடுவது போலிருக்கும். படத்தின் அந்தக் காட்சிக்காக நான் காத்திருந்து, ரசித்துப் பார்ப்பேன். Eerie, I tell you. அதுவும் கூத்துப்பட்டறைக்காரர்களின் சிறப்புதான். அவருடைய நடிப்பின் வீர்யத்தைப் பார்த்து அசந்து போனேன். ['பரமார்த்த குரு பார்த்தேன் என்று சொன்னபோது, ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, "நல்லா இருந்துச்சா?" என்றார்.]

வேலை முடிந்து (நான் வந்த வேலையில் அவரும் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது பிறகு தெரிந்தது), கிளம்பும் சமயத்தில் திடீரென்று ஆட்டோகிராஃப் வேண்டும் என்று நான் புக்கை நீட்ட, "அய்யோ!" என்று சீட்டில் சாய்ந்தவர்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சொன்னார் - அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். அப்புறம் ஐந்து விரல்களை வரைந்து, உள்ளுக்குள்ளே பெரிதாக எழுதிக்கொடுத்தார்.

அதான். தலைப்பில் ஐந்து விரல். Heh.

பி.கு: இன்று சேமியர்ஸில் 'சென்னையில் சினிமா' பற்றி நிகழ்ச்சி.
|

5 Comments:

 • At 12:20 PM, Blogger Jayaprakash Sampath said…

  கலைராணி சுட்டிக்கு நன்றி. அவங்க profile பார்த்தாலே பயமாயிருக்கு :-). இப்படிப்பட்டவங்களை, தமிழ்ச் சினிமா, மனோரமா, கமலா காமேஷ் போன்றவர்களுக்கு சப்ஸ்டிட்யூட் ஆகத்தான் பயன்படுத்துது. கொடுமை (:

  சேமியர்ஸ் போயிருந்தீங்களா? மிஸ் பண்ணிட்டேன். ஹரிஹரன் ரொம்ப பிடிச்ச இயக்குனர். என்ன பேசினார்? ரிப்போர்ட் எங்கே? :-).

  நாளைக்குத்தானே ராண்டார்கை?

   
 • At 12:28 PM, Blogger Pavithra Srinivasan said…

  நாளைக்குத்தான் ராண்டார் கை. பி.எஸ் ஹை ஸ்கூலில். அன்றைக்கே தியோடோர் பாஸ்கரனும் பேசுகிறார். எதற்குப் போவதென்று மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன். விண்டேஜ் சினிமா மீது எனக்கு ஒரு மோகம் உண்டு. Film clips எல்லாம் உண்டாம்.

  சேமியர்ஸ் நிகழ்ச்சி அட்டகாசமாக இருந்தது. ஹரிஹரன் ஆடியன்ஸ் நாடியைப் பிடிக்கத் தெரிந்தவர். சீரியஸ்ஸாகவும் பேசினார். விழுந்து விழுந்து சிரிக்கவும் வைத்தார். டி.ராஜேந்தர் பற்றி பயங்கர நக்கல். அதைப் பற்றி இன்று எழுதுகிறேன் (நோட்ஸெல்லாம் எடுத்தேன் ...)நேற்று நல்ல கூட்டம். கலைராணியிடம் காலையில் விஷயம் சொன்னதால் அவரும் வந்திருந்தார்.

  கலைராணியின் ப்ரொஃபைலைப் பார்த்து நானும் பயந்துதான் போனேன். ஒர் நிமிடம் அவங்கதானா என்று சந்தேகமே வந்துவிட்டது. I hope she gets good scripts. She's being wasted, now.

   
 • At 1:14 PM, Blogger Jayaprakash Sampath said…

  தியோடர் பாஸ்கரன் ரோஜா முத்தையா லைப்ரரி பத்தி பேசப் போறார்... போர் :-)

  நான் ராண்டார்கை நிகழ்ச்சிக்குத்தான் போகப் போறேன். செம கலக்கலாப் பேசுவார். கிளிப்பிங் உண்டுன்னா இன்னமும் ஜோர்.. கேள்வி நேரமும் இருக்கும்னு எதிர்பார்க்கிறேன். வந்தீங்கன்னா ஒரு அலோ சொல்லுங்க :-)

   
 • At 4:49 PM, Blogger Ambimama said…

  All articles ar excellent.I will leran Tamil typing and post comment soon.Iama tamilian but typing is difft.....

   
 • At 5:06 PM, Blogger Pavithra Srinivasan said…

  Prakash: உங்க ரெக்கமெண்டேஷனால் அநேகமா ராண்டார் கைக்குத்தான் வந்து சேருவேன்னு நெனைக்கிறேன். :)

  Ambimama: வருக, வருக. சீக்கிரம் தமிழ் எழுதக் கற்று வாருங்கள். :)

   

Post a Comment

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

<< Home