Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, April 17, 2004

ஆஆஆ...!

(c)thatstelugu


ஆஆ...நடிகை சௌந்தர்யா விபத்தில் இறந்துவிட்டாராம்! எவ்வளவு திறமையான நடிகை. Oh my God... :-(((
|

Thursday, April 15, 2004

துக்கடா

Pre-script: Is this readable???

1. ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன், 'பாய்ஸ்' திரைப்படம் பார்க்க உட்கார்ந்தேன். (அதுதான் தமிழ்ப் புத்தாண்டு சிறப்புத் திரைப்படம்.). மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. 'இந்திய'னையும், 'முதல்வ'னையும் கொடுத்த ஷங்கரா, இப்படி ஒரு Mills and Boon கதையைத் தேர்ந்தெடுத்துப் படமாக்கியிருக்கிறார்? ப்ச். ரொம்பவும் ரொமாண்டிக்காகக் கதையை நகர்த்த ஆசைப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. பணக்காரக் கதாநாயகி, காதலனுடன் மோட்டர் ரூமில் உட்கார்ந்துகொண்டு, 'எனக்கு வாழ்க்கை வசதி எதுவும் வேண்டாம்; நீ போதும்,' என்று சொல்லும் காட்சி நியாயப்படி உள்ளத்தை உருக்கியிருக்க வேண்டும். எனக்கு சிரிப்புதான் வந்தது. [நிஜ வாழ்க்கையில், 'ஏசி'யில் வளர்ந்தவர்களை ஒரு நாள் காரை பெயர்ந்த, சிமெண்ட்டுப் பதித்த வீட்டில் இருக்க வைத்தால், அப்பொழுது தெரியும். 'நான் பிச்சை எடுத்தாவது என்னைக் காப்பாத்திக்குவேன், ' என்று அபத்த வசனங்களும் இந்த அதீத ரகம்தான்.] அப்புறம் Sonyகாரர்களிடம், 'ப்ளீஸ் சர்', என்று கெஞ்சலுடன் பாடுவது...சே. அடுத்த காட்சியிலேயே கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாடுகிறார்கள்...எப்படி? யார் உள்ளே விட்டது? யார் பாட அனுமதி கொடுத்தது? லாஜிக் எக்கச்சக்கமாக இடிக்கிறது.

படத்தின் ஒரே ப்ளஸ், வசனம் மட்டும்தான்.:-))

2. இன்னொரு சிறப்புத் திரைப்படம்: வாலி. இது எவ்வளவோ பரவாயில்லை. (நான் சிம்ரன் ரசிகை.)

3. Monsieur ரவியாவின் சென்னை அனுபவங்களை மரத்தடியில் படித்தேன். :-))))

4. சென்னையில் சூரியனின் ஆதிக்கம் மிக அதிகமாகிவிட்டது. வெளியில் கால் வைக்க முடியவில்லை. (இது அரசியல் சம்மந்தப்பட்டதில்லை.)

5. 'அருளுடைச் சோழமண்டலம்' என்று அருமையான புத்தகம் ஒன்று அகப்பட்டது.சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு சோழ நாட்டில் ஏற்படும் வாரிசுத் தகராறை எப்படிச் சோழர்கள் சமாளிக்கிறார்கள் என்பதற்குப் 'பல்லவராயன் பேட்டை' என்னுமிடத்தில் உள்ள சிதிலமடைந்த கல்வெட்டைத்தான் இதுவரை 'நாடி'யிருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டின் செய்திகளை உறுதிப்படுத்தும் பிற கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டி புதைந்தும் மறைந்தும் கிடக்கின்றன என்கிறது 'அ.சோ.ம.' சோழ இளவரசர்கள் மறைத்து வைக்கப்படுவதும், அவர்களைக் காப்பாற்ற அரசருக்கு அணுக்கமானவர்கள் வாள் உருவி சபதம் எடுத்துக்கொள்வதும், ஏறக்குறைய 800 வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இன்றைய உலகில் மீண்டும் பிறப்பதும்...குடந்தை சேதுராமன், நாடி ஜோசியத்தைப் பயன்படுத்தி, 'உண்மையில் என்ன நடந்தது' என்று விளக்கியிருக்கிறார். அருமை, அருமை.

டாக்டர். கலைக்கோவனிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். "இதைப் பத்தியெல்லாம் என்ன நினைக்கிறீங்க?" என்றேன். அவரது பதில்: ஒரு நமட்டுச் சிரிப்பு. 'என்னம்மா, இதையெல்லாம் போயி...' என்றார். கல்வெட்டுக்கள்தான் மிக முக்கியமான் ஆதாரம் என்று நம்புபவர் அவர்.

ஆனால் எனக்கு இதிலெல்லாம் ஒரு அசைக்கமுடியாத உண்மை இருப்பதாகத்தான் படுகிறது. இதைப் பற்றி நீஈஈஈஈஈஈஈண்ட பதிவு ஒன்றைச் செய்ய வேண்டும்.

6. பிறந்தநாள் பரிசாக பிள்ளையார் வீடு தேடி வந்தார். நன்றி சொல்லி கொசப்பேட்டைக்கு ஆள்விட்டு அனுப்பியிருக்கிறேன். :-)

7. இந்தப் பதிவு 'யூனிகோடி'ல். தெரிகிறதா, இல்லையா?
|

Tuesday, April 13, 2004

�b�� ����!

��� '��ý' �ռ� "�츢���. (�â¡�� ������ �!ɡ�, ��� ����� ��, ���� �Ȩ� }���.) �� �ռ� h� "���즸���a�, ��� ����a�. ����� ��ո�ɡ�� ���о��.:-)

�ɢ� �b�� ���� š��и�!
|