Shangri - La

Anything under the sun - in Thamizh!

Wednesday, May 04, 2005

இன்று மலர்ந்த காலை...


வலைப்பதிவிலோ, குழுமத்திலோ, எழுத்து மூலம் மட்டுமே சந்திக்கும் நண்பர்களை நேரில் பார்ப்பது ஒரு வித்தியாசமான, சந்தோஷ அனுபவம். இன்று காலையும் அப்படியொரு அனுபவம்தான். ஏழரை மணிக்கு ஜெயா டீவியில் நண்பர் பிகேஎஸ்ஸின் (அசப்பில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் மாதிரி இருக்கிறார் :-) பேட்டி [(ஒளிபரப்பப்போகும் நேரம் நன்கு நினைவிலிருந்தது - பிரசன்னாவும் காலையில் தொலைபேசி ஞாபகப்படுத்தினார் :)] . Anyindian.com பற்றி நளினமான செந்தமிழில், கோர்வையாகப் பேசினார் (கொஞ்சம் நெர்வசாக இருந்தாரோ? :). தொகுப்பாளர்களும் அதிகபட்ச விஷயத்தை வெளிக்கொண்டு வரும் முறையில் ( அஞ்சல் செலவிலிருந்து, எவ்வளவு விற்பனை என்பது வரையில்) கேள்விகள் கேட்டார்கள்.

மென்பொருள் வடிவமைப்பு ஆலோசகர் என்பதிலிருந்து, தமிழ் இலக்கியத்திற்கு எப்படி வந்தார் என்பது அவர் விவரித்தது சுவையாக இருந்தது. பார்க்கப் பார்க்க, 'இவர் அசாத்திய சுறுசுறுப்பு மனிதர்' என்பது மீண்டும் மீண்டும் உறுதியாயிற்று. சுவாரசியமான நாற்பது நிமிடங்கள்.
|