Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, October 31, 2004

தலைப்பற்றது

ஒரே சமயத்தில் இரண்டு 'எண்ணங்கள்' வகையிலான பதிவுகள் வைத்திருந்தால், ஒன்று:

1. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியையும் சுவாரசியமாக பதிவு செய்யும் திறமை இருக்க வேண்டும். (கொஞ்ச நாளில் இது கழுத்தறுப்பாக மாறும் வாய்ப்பு மிக அதிகம்.)

எ.கா: இன்று காலை பெருங்காயக் கட்டியை உடைக்கும் சமயம் கையை வெட்டிக்கொண்டேன் (அதாகப்பட்டது, கட்டியைக் கத்தியால் உடைக்கும்போது, கத்தி கை நழுவி, கையை...). பெருங்காயப் பொடி என்று ஒன்று இருக்கும்போது, எதற்குக் கட்டியை வைத்துக்கொண்டு திண்டாட வேண்டும் என்பது அற்புதமான கேள்வி. (விடை: மணமும் குணமும் நிறைந்த சாம்பார்.).

அல்லது,

2. அதி உன்னத, நிமிடத்துக்கு நிமிடம் புத்தம்புதிய அனுபவங்களுடைய வாழ்க்கையையாவது வாழ வேண்டும்.(Define 'புத்தம்புதிய அனுபவம்'. இதற்கு விளக்கம் கிடைத்தால் தொடர முடியும். கிடைக்கும் அனுபவங்கள் எல்லாவற்றையும் சுவாரசியமாக எழுதுவது நடக்காத காரணம். அழகாக எடிட் செய்யும் திறன் வேண்டும்.)

இரண்டில் எது...?
|