Shangri - La

Anything under the sun - in Thamizh!

Monday, September 18, 2006

துணியும் 'டீ'யும்





"துணிகள் பெட்டி அநேகமாகக் காலியாக இருக்கிறது. துணியோ அதிக விலை; கிடைப்பதும் கஷ்டம். ஆனாலும், யுத்தகால வாழ்க்கையின் கஷ்டங்களில் இது ஒன்று. ஆதார வகைகளும் எரிதுரும்புகளும் இன்றும் கிராக்கியாய் இருக்கின்றன. வாழ்க்கை பூராவும் பிரச்சனைகளாக இருக்கின்றன. அதுதான் வெற்றியின் விலை. ஆனால் தற்கால கஷ்டங்களின் பயனாக வாழவே முடியாது என்று தோன்றும் சமயம் உங்களை ஜீவித்திருக்க உதவுவதற்குத் தயாராக ஒரு நேசன் இருக்கிறான். அதுதான் டீ.

இன்னமும் நியாயமான விலையில், எப்போது வேண்டுமானாலும் கிடைக்கிறது. இந்தக் கஷ்ட காலங்களில் டீ ஒரு ஆச்சர்யத்தக்க சுகத்தைக் கொடுக்கிறது. கெடுதலனியில் கிளர்த்துகிறது. அதன் விசேஷ குணங்களினால் பிரச்சனைகள் அதிகக் கஷ்டமில்லாமலும் கவலைகள் மிக முக்கியமற்றவைகளாயும் ஆறிவிடுகின்றன. "


- இந்தியன் டீ
(இந்தியன் டீ மார்க்கெட் எக்ஸ்பான்ஷன் போர்டாரால் வெளியிடப்பட்டது)
-
கல்கி இதழ், ஜூன் 10, 1945.


துணியில்லாவிட்டால் டீ சாப்பிட வேண்டும் என்ற லாஜிக் சிரிப்பை வரவழைத்தாலும் ... மவுண்ட் ரோடில் நிற்கும் RMkv ஹோர்டிங்குகளைப் பார்த்தால் 'அப்படியொன்றும் தவறில்லை" என்று தோன்றுகிறது.

|