Shangri - La

Anything under the sun - in Thamizh!

Saturday, October 23, 2004

என்றும் (வி)ஜயம்

நீலோத்பல தள ஷ்யாமாம் விஜ்ஜகாம் மாம் அஜானதா
வ்ருதைவ தண்டினா ப்ரோக்தம்
சர்வ சுக்லா சரஸ்வதி



ஒரு வருடம் யார் கண்ணிலும் படமால், நமக்குரிய பெயர், ஊர், சொந்தம் சொந்தம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சமையல்காரராகவும், பணிப்பெண்ணாகவும் வாழ முடியுமா? குதிரைக் கொட்டடியில் வேலை பார்க்க முடியுமா? பாண்டவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வெளிப்பட்ட தினம்தான் இன்று. 'விஜய'தசமி.

விஜயதசமி அன்று எதையாவது புதிதாக ஆரம்பிக்க வேண்டும். பழையவற்றில் உருப்படியானவற்றை (மட்டும்) தொடர வேண்டும். தொடர்ந்தேன்.

திரு. தேசிகனின் வலைப்பதிவில் முன்பு திரு. டி.எஸ்.எஸ் ராஜனின் வாழ்க்கையை மொழி பெயர்த்திருந்த திரு. ரங்கராஜனிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மேலேயுள்ள சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைச் சொன்னவர் அவர்தான்.

'தண்டி' என்ற புகழ்பெற்ற கவிஞர், தனது நூல் ஒன்றுக்கு, 'சர்வ சுக்லா சரஸ்வதி' என்று சரஸ்வதி தேவிக்கு வாழ்த்து எழுதினாராம். பல கலைகளில் வல்லமையுள்ள விஜ்ஜகா என்ற இளவரசி ஒருத்தி, 'தண்டிக்கு என் இருப்பு தெரியவில்லை - தெரிந்திருந்தால் அவர் இப்படி சரஸ்வதிக்கு தனது நூலை அர்ப்பணம் செய்திருக்க மாட்டார்,' என்று எழுதினாராம்.

"இன்னிக்கு என்ன திடீர்னு இப்படி ஒரு ஸ்லோகம்?" என்று கேட்டேன்.

சிரிப்புதான் பதிலாக வந்தது.:-))

|