Shangri - La

Anything under the sun - in Thamizh!

Sunday, May 28, 2006

இன்றைய பொழுது...

'எழுதி ரொம்ப நாளாகிவிட்டது' என்று இன்னொரு முறை சொன்னால் அது படிப்பவருக்கு எக்கச்சக்கமாக அலுப்புத் தட்டும். என்ன செய்ய? அதே வாக்கியத்துடன்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

எம் எஸ் வர்டில் தமிழில் டைப் அடித்து எவ்வளவு நாட்களாகிவிட்டன என்பதை மறைந்துபோன 'அ', 'ஷ'க்களிலிருந்து தெரிந்துகொண்டேன் (கூடவே அருணாவின் எச்சரிக்கையிலும்.) கை ஒழுங்க்காக தட்டச்சு செய்வதற்குபதில் கண்ட கண்ட எழுத்துக்களின் மேல் தந்தியடிக்கிறது. (Grr.)

விட்டுப்போன பகுதிகள் சிலவற்றை இணைத்து, கதா உத்ஸவ் பகுதி இரண்டை இங்கே தருகிறேன். ஜாப்பர் ஹ¤ஸ்ஸேன், மஹேஷ் தத்தானி, இருவரும் பேசி விஷயங்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக எனக்குப்பட்டன. அதனால் அவற்றை அப்படியே, verbatim, தருகிறேன்.

இன்னொரு விஷயம்: கட்டுரையில், எழுத்தாளர் இமையத்தின் 'ஆறுமுகம்' நாவலின் மொழிபெயர்ப்பை நான் எடிட் செய்து கொண்டிருப்பதாகச் சொன்னேன் அல்லவா? புத்தகம் வெளிவந்துவிட்டது. இதோ அதன் அட்டை:



சுட்டி இங்கே.



******************

கதா உத்ஸவ் - 2

உற்சவம். திருவிழா. எல்லோரும் உற்சாகமாக உரையாடி, முடிந்தால் டிப் பாடி, புத்தம் புது மனிதர்களைச் சந்தித்து, நட்பாக்கிக்கொண்டு, மனம் நிறைந்து திரும்பும் சமயம். இந்த முறை கதா (KATHA Asia International Utsav, 2006) உற்சவமும் எனக்கு அப்படித்தான் அமைந்தது. சென்னையிலிருந்து கிளம்பும்போது ஏகப்பட்ட கேள்விகளூடன் கிளம்பினேன் - இந்த மாதிரியான இலக்கிய விழா எப்படி இருக்கும்? ஒரே சமயத்தில் ஏழெட்டு இடங்களில் நிகழ்ச்சிகள் இருக்கும்போது, எப்படி எல்லாவற்றையும் ரசிப்பது? யார் யார் வருவார்கள்? யாரை சந்திப்பது, யாரை விடுவது?

முக்கியமாக, இந்த மாதங்களில் தில்லியை உறைய வைக்கும் குளிரை சமாளிப்பது எப்படி?

பார்த்தவர்கள் எல்லோரும் பயமுறுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். "இந்த வெதர்லியா போறீங்க? அங்க இப்ப மைனஸ்ல இருக்கும்ங்க," என்றார்கள், எங்கள் முகங்கள் வெளிறிப்போவதைப் பார்த்து ரசித்தபடி. "கவலையே படாதீங்க. உறைஞ்சு போயிடுவீங்க. சென்னை குளிர்காலத்தை பாத்தவங்களால அங்க சமாளிக்கவே முடியாது. என்னவோ போங்க. தெரிஞ்சுதான் செய்யறீங்களா?" என்றெல்லாம் ரொம்பவே ஏற்றிவிட்டார்கள். தில்லி வந்து சேரும் முன்பே நாங்கள் (நானும் சக எடிட்டரும்) நடுங்க ஆரம்பித்துவிட்டோம்.

எல்லாவற்றையும் மீறி, கதா இலக்கிய விழா எப்படித்தான் இருக்கும் என்ற குறுகுறுப்பு எங்களுக்குள் எழுந்துகொண்டுதான் இருந்தது.

ஜனவரி ஆறாம் தேதி ஏழேகால் மணிக்கு ராஜதானியில் ஆரம்பித்த எங்கள் தில்லிப் பிராயணம், ஏழாம் தேதி மதியம் மூன்றேமுக்காலுக்கு, ஹஜ்ரத் நிஜாமுத்தீன் ஸ்டேஷனில் முடிந்தது. வந்து இறங்கியவுடன் நான் கவனித்த முதல் விஷயம் - ஜிலீரென்று காதுக்குள் ஐஸ் மாதிரி நுழைந்த குளிர். கொஞ்சம் கலங்கிப்போய் காதுகளை முடிக்கொண்டேன். மதியானம் மூன்று மணிக்கே இப்படியென்றால், இரவு எப்படியோ? (அன்று இரவுதான் 0.2 டிகிரியைத் தொட்டது குளிர்.)

ஆளை அடிக்கும் சிவப்பு ம·ப்ளரும், நீலக் கலர் ஸ்வெட்டருமாக நாங்கள் இறங்கிய தோரணையைப் பார்த்து தில்லியே சிரித்திருக்கக் கூடும் - அங்கே நாங்கள் பார்த்தவர்கள் எல்லோரும் அநியாயத்திற்கு பொருத்தமாக உடுத்துகிறார்கள். தில்லியின் பிரதான வீதிகளைத் தாண்டி, ISI ஹாஸ்டலுக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, மாலை மணி ஐந்து. பெட்டி படுக்கைகளையெல்லாம் இறக்கிவிட்டு, கதா உத்ஸவ் நடந்து கொண்டிருந்த இந்தியா ஹாபிட்டாட் செண்டருக்கு (India Habitat Centre) நடந்தோம். வாயால் ஊதினால் புகை வருகிறதா என்று சோதனை செய்துகொண்டே (புகை வந்தது) ஹாபிட்டாட் செண்டருக்குள் நுழைந்த பிறகு ... குளிராவது? எல்லாம் மறந்துவிட்டது.

சாயங்காலம் ஆறு மணிக்கு ஹீட் செய்யப்ப்ட்ட ஸ்டெய்ன் (Stein) டிட்டோரியத்திற்குள் நுழைந்த போது, கதா சூடாமணி விருது வழங்கும் விழா அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது.

கதா உத்ஸவ் ஒவ்வொரு வருடமும் நடக்கும் வி"யம் இல்லை. இரண்டு வருடத்திற்கொருமுறை - முடிந்தால், விட்ட வருடத்தில் சிறியதாக ஒரு இலக்கியத் திருவிழா கொண்டாடிவிடுவது வழக்கம். கதாவின் இலக்கிய உற்சவங்கள் மூன்று பிரதான நிகழ்ச்சிகளைச் சுற்றிப் பின்னப்படும் ஒளிப்பின்னல்கள். ஒன்று: கதா சூடாமணி விருது வழங்கும் விழா. இரண்டு: ஓவியர்களைக் கௌரவிக்கும் சித்ரகலா விழா. மூன்று: கதா பரிசுத் தொகுப்பிற்காகத் (Katha Prize Stories) தேர்ந்தெடுக்கப்பட்ட வெவ்வேறு இந்திய மொழிச் சிறுகதை எழுத்தாளர்கள், அவர்களது சிறுகதைகளை மொழிபெயர்த்தவர்கள், மற்றும் அந்தக் கதைகளை தொகுப்பிற்காகத் தேர்தெடுக்கும் பத்திரிகை ஆசிரியர்களையும் கௌரவிக்கும் கதா விருதுகள். இவை மூன்றையும் சுற்றித்தான் கதா உத்ஸவ் நடைபெறுகிறது.

இந்த முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. 2005ம் வருடக் கதா சூடாமணி விருது, ராஜஸ்தானில், பொருண்டா என்ற கிராமத்தில் பிறந்து, நாட்டுப்புறக் கதைகளின் கருவை வைத்தி அருமையான கதைகளைப் பின்னும் எழுத்தாளர் விஜய்தான் தேதாவுக்குச் (Vijaydan Detha) சென்றது. சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் இவர். "பாலைவனத்தில் தோன்றும் கதைகள் பாலையின் மணல்துகள்கள் போன்றவை - நுட்பமானவை, கண்ணாடி போன்ற துல்லியத்தைக் கொண்டவை" - என்கிறார், அவர் பிறந்த மண்ணின் கதைகளின் வளத்தைப் பற்றிப் பேசும்போது. விருது கொடுத்து கௌரவித்த திரு.மணி ஷங்கர் ஐயர் உட்பட பலர் ஹிந்தியில் பேசினார்கள். மொழி அவ்வளவாகப் புரியவில்லை என்றாலும், அவர்கள் பேசிய ஒலி இனிமையாக, மென்மையாக இருந்தது. காம்பியர் செய்தது எங்கள் Editorial team தில்லி கிளை - நீலம் நரூலா.

இதுதான் என் முதல் தில்லி விஜயம் - அதனால் பார்த்த எல்லாமே புதுமையாக இருந்தது. தில்லி போன பிறகு, தலைநகரைச் சுற்றிப் பார்க்க இந்த மாதங்களில்தான் செல்லவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.

உடனேயே குளிர் சற்றுக் குறைந்தாற்போல் இருந்தது.

தினமும் கால்லையில் எழுந்து, ISI ஹாஸ்டலில் காலை எட்டு மணிக்கு சுடச்சுட சப்பாத்தி/பூரி/சேவை/உப்புமா சாப்பிட்டுவிட்டு, ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹாபிட்டாட் செண்டர் என்னும் பிரம்மாண்டத்திற்குள் நுழைந்து விட்டால், நேரம் போவதே தெரியாது. கேட் மூன்று வழியாக நடந்து சென்று, அதி நவீன சிற்பம் ஒன்றை தாண்டி (முன்று காலோ, ஐந்து காலோ உள்ள ஒரு வடிவம்) படிக்கட்டுக்களில் ஏறி, புல்தரையில் கால் வைத்தால் "தன் பரப்பளவு புரியும். சுற்றிலும் மிகப் பெரிய, செங்கல் நிறக் கட்டிடங்கள், வானை முட்டிக்கொண்டு. ஒவ்வொன்றிலும் அரங்குகள் - ஒவ்வொன்றிலும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்கும்.

இந்த முறை கதா விழாவுக்காக எடுத்துக்கொண்ட கரு: நகரங்கள். City Stories. ஒரே நகரத்தில் எத்தனையோ இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் பார்வை எவ்வளவோ மாறுபடும். நகரத்தை வடிவமைப்பவர் "தைப் பார்ப்பதற்கும், அதில் வாழ்வோர் அதைக் காணுவதிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்களை எழுத்து, பேச்சு, திரைப்படம், ஹைக்கூ என்று கலை வடிவமாக ஸ்பரிசிக்கவும் இந்த ஐந்து நாட்கள் பல சந்தர்ப்பங்களைத் தந்தன.

இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நகரத்தைச் சுற்றியே இருக்கும். முதன்முதலில் நாங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி - சில்வர் ஓக் என்ற சிறிய அரங்கில் (எங்கள் வீட்டு ஹால் சைஸ்தான் இருக்கும்) - 'But you can't get there on a city bus' - அதுதான் தலைப்பு. சதானந்த் மேனனுடன் ஒரு கலந்துரையாடல். சாதிப் பிரச்சனைகள்; அப்பொழுது நம் நகரங்கள் இருந்த நிலைமை, இப்பொழுது அதே கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? நகரங்களில் இருப்பவர்கள் உண்மையிலேயே சுதந்திரம் பெற்றவர்கள்தானா? அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யார் என்றே தெரியாமல் இருப்பது உண்மையில் விடுதலையா, அல்லது அதுவே ஒரு தளையா?

அப்பொழுதுதான் கல்லூரியிலிருந்து வெளியேறியது போல் இருந்த ஒரு இளைஞர், 'நம் ஊரில் ஜாதிகளை ஒழிக்கவே முடியாதா?' என்று வீராவேசத்துடன் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில்கள் சுவையானவை. பலரிடமிருந்து புன்னகைகள்; சிலர் உண்மை நிலவரம் இப்பொழுது எப்படி என்று விவரிக்க ரம்பித்தனர்; மற்றும் சிலர் தனிப்பட்ட மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைப்பற்றிப் பேசினர்.

அப்புறம் வேறொரு அரங்கில் மஹேஷ் தத்தானி (Mahesh Dattani), ஜாப்பர் யஸ்ஸின் ஹ¤ஸ்ஸேனுடன் (Jabber Yassin Hussein) ஒரு உரையாடல் - Cities and the Concept of the Contemporary. தத்தானி BBCக்காக நாடகங்கள் எழுதுபவர். ஹ¤ஸ்ஸேன் பாக்தாத்தில் சிறு வயதில் வளர்ந்தவர் (பின்னால் ·ப்ரான்ஸ¤க்குக் குடியேறிவிட்டார்). முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தாலும், பிறகு அரபிக்தான் தனக்கு இன்னும் சரளமாக வருகிறது என்று சொல்லியதால், மொழிபெயர்ப்பாளர் மோனா பேக்கர் (Mona Baker) அவருக்காக (அற்புதமாக, நடுவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வே தோன்றாமல்) மொழிபெயர்த்தார். அவரது வார்த்தைகளின் அழகை என்னவென்று சொல்வது? ரத்தினக் கம்பளத்தை விரித்தாற் போல ஒரு கவர்ச்சி; நுணுக்கம், சொற்கள் மணிகளைத் தரையில் கொட்டினாற்போல் வந்து விழுகின்றன.

"தனிப்பட்ட மனிதர்களின் கற்பனைகளின் மொத்த உருவம்தான் ஒரு நகரம்," என்றார் அவர். "ஆனால், நம் நகரங்களில் இப்பொழுதெல்லாம் கற்பனைகளுக்கு வெளியே உருவம் கொடுக்க முடியவில்லை - நம் நகரங்கள் அவற்றை உள்நோக்கியே செலுத்தப் பார்க்கின்றன."

அவர்களது உரையாடல் முழுவதையும் இங்கு தந்திருக்கிறேன்:

ஜாப்பர் யஸ்ஸின் ஹ¤ஸ்ஸேன்:

The name it self suggests that - it comes from the name Bawulla (?), which literally means, The Door of God. I have visited many ancient cities around the world, including Athens, Cairo, Paris and Rome. But I was born in Baghdad.

All these cities, at different times in history have tried to be ideal cities, like the City of Babel, but history has not allowed them opportunity to assume that.

On the other hand the idea of an ideal city seems to me to be an actual pssibility and perhaps the city of Babel was destroyed because it came nearest to that ideal.

And it also seems to me that the architects of those 'old cities?' - they were more human than the architects of today.

When you walk around cities like Old Rome and Cairo and Old Delhi, it seems that the spaces in these cities allow you to connect, that won't be allowed in new cities.

The modern city seems to me to be violent and to be designed to disperse people into separate pockets.

A city like Paris where I've lived for many years, seems have a kind of rhythm, a rhythm that comes from within. At the same time, it is actually a city that is difficut to live in, a city that does not allow people to live in prosperity.

People who live in Paris are separated on the basis of class, ethnicity, and many divisions that do not allow them to come together.

Cities like Paris and London that gives an impression of quietness, of loneliness.

On a personal level, and because I have been away from home, and have lived in France for a long time, I have tried to bring these cities togther.

In my book, for the Bagdhdad reader, I have tried to bring together cities like Beunos Aries, and Bagdad, bring these cities together, because modern cities seem to be based on isolation.

The city above all is the individual's way of imagination. The modern city does not allow the imagination take rein, to develop as much as it forces it to turn onto itself.

The human imagination has invented something called the city, which is one of the greatest inventions of mankind, but we now have the problem of the city.

I believe that the whole world has completely failed to produce the modern city.

We only need to see the layouts at the plans, for old Mexico city which was the basis of a great civilization, to realize that we have completely failed to produce a great city.

As I roam round cities today, I keep thinking, we have to reconsider how to produce the humane city , the city that will allow its people to live happily, to live as an individual.

We live in vast cities, today they are very big, but they are cities without.

மஹேஷ் தத்தானி:

People are still in denial about who they really are. They want to project themselves, that is the preoccupation. Until that they are projecting an identity, we won't really understand who we really are.

I think again, what is I'm sure its going to be definitely called by someone, who might not be interested in coming. What is urban-ness?

Urban spaces give me the space to do what I want to do, even my parents were not allowed this, which might be acceptable in a rural environment. Oh, I've said too much, [laughter]

Uh, so I guess it is to do with: the mind and the place are connected. Seeking out to exist. The mind could project itself. Those are places in s\cities you would want to belong. That is what we identify as city.

According to Kakkar, what is Bombay? The Taj, and the Sapphire Grill, and when you ask someone else, they might say completely different.

Chowpatti Beach, panipuri wala and the bhelpuri wala. For me it was completely different. And the city is as fluid as the mind. It is the mind and the place.

The Rippon building was built in 1924. Shantiniketan a building was built - a small house. But when we think these things closer. The problem arises. Suppose there was a naxalite movement in Kolkatta and there was a problem. The police identified the students. Kolkatta and Chennai - these cities were built under British rule. Colonization. The model was England.

Well again, I see your point that especially if you're looking at the colonized mind - the Indian urban mind. To my father - he was very pro- Gandhian. In his time he was, I think, British. But he wanted us to study in an English. I believe that everything good came out of Europe. I've been to Shantiniketan - what's the big deal. It's only when you interact with the people, what SN did to the people nearby that you understand. It was, in that sense a village made into a city. Not in the colonial sense of the word. Not tall structures and all that stuff.

Widening of gap between rural and urban landscapes, hasn't this created a rift between us? The hatred - tee wouldn't be such tings called solutions.

Disruptions keep creeping in. The rural areas have been neglected - when you say that, that just adds fuel to the rural-urban divide. If you go to villages, they aren't really concerned about us, either. It's an illusion that we're different. It really boils down to whether you're being displaced, whether you follow tradition, and that's where you send your attention. I've seen the urban -rural divide falling apart - maybe my imagination. I don't think exploitation come only from the city. Exploitation is about fear and power and threats to your community. As long as there's exploitations, you will have uprising. The naxalbari happened out of necessity and lots of good am out of it. That's a completely different issue.

Cities are very much caught up in the present.

If you miss your village, you're displaced. You're a city person now. Someone's going to miss the city of twenty years ago. Someone who misses their place brings change here. You may bring out your village, or you might adapt. No matter what you do, you bring change. You create the parampara. It happens because it's true. Displacement is the only truth. I think I can stick my neck out and say that. [laughter]


புகைப்படங்கள் வழியே நகரம். தொலைக்காட்சியின் மூலம் நகரம். பழைமையும் புதுமையும். ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த அதே நகரமா இப்போதும் இருக்கிறது? ஐந்து நிமிடங்களுக்கு முன் இருந்த நகரமே இப்பொழுது இல்லையே? Urbanization என்று சொல்லிக்கொண்டு நகரத்தை மாற்றியமைப்பவர்கள் உண்மையில் நன்மையைத்தான்ச் செய்கிறார்களா?

பல உரையாடல்கள். கட்டுரைகள். குறுக்கும் நெடுக்குமாக வார்த்தைப் பரிமாற்றங்கள்.

பிறகு வெளியே புல்வெளியில் மதிய உணவு. ஏகப்பட்ட உணவு வகைகள். எல்லாவற்றையும் சுவைத்துவிட வேண்டும் என்று எடுத்துக்கொண்டதில், தட்டு முழுவதும் வர்ணக் கலவையாக இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே பேசுவதும் ஒரு சுகம். ஒரு பக்கம் திபேத்தியக் கவிதைகள் கேட்கும். இன்னொரு பக்கம் ஷ்யாம் பெனகல் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

அன்று இரவு, 'West Beirut' என்ற படம் பார்த்தோம். 1975இல் நடக்கும் அமளியில், கிழக்கில் கிறிஸ்துவ திக்கத்திற்குட்பட்ட பெய்ரூத்தாகவும், மேற்கே முஸ்லிம் திக்கத்திற்குட்பட்ட நகரமாக பிரியும் தருணத்தில், தாரிக், ஒமர் என்னும் இளைஞர்களும், மே என்ற இளைஞியும் அடையும் அனுபங்கள்தான் படம். லெபனான் தந்த இந்த அற்புத படைப்பைப் பார்த்துக்கொண்டிருந்த போது நேரம் போனதே தெரியவில்லை.

'அம்மா, எனக்கு ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கலை,' என்று அடம்பிடிக்கும் இரு பையன்கள், மெல்ல மெல்ல குழப்பமும் அமளியும் ஊரில் அதிகரிக்க அதிகரிக்க, தவித்துப் போகிறார்கள். திடீரென்று ஒரு நாள் வீட்டுப் பக்கத்தில் குண்டு வெடிக்கும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிகிறது. இதற்கிடையில் துக்கடா காதல், வயதுக் கோளாறு விஷமங்கள், என்று வாழ்க்கையும் அதன் போக்கில் போகிறது. என்றாலும், போரின் நிழலுருவம் அவர்களைத் துரத்திக்கொண்டேதான் இருக்கிறது.

தாரிக்கின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் பின்னியிருக்கிறார். 'இனிமேல் பெய்ரூத்தில் இருக்க முடியாது, நாம் கிளம்புவோம்,' என்று அழுது புரண்டு "மர்க்களம் செய்யும்போது, தடாலென்று காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் பிள்ளையை இழுத்துக்கொண்டு இறங்கி எங்கோ மோதிவிட்டு அழுதுகொண்டு இருக்கும்போது, கடைசியில், கணவரின் கிட்டார் இசையைக் கேட்டுக்கொண்டு மென்மையான புன்னகையுடன் 'பெய்ரூத்தில்தான் இருக்க வேண்டும்,' என்ற அவரது உணர்வை மதிக்கும்போது ...

கடைசிக் காட்சியில் அவரைக் காணவில்லை. கண்ணீர் மல்க தாரிக்கும் அவனது அப்பாவும் போரால் துவம்சம் செய்யப்பட்ட பெய்ரூத்தை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்.

படம் முடிந்து வெளியில் வந்த போது (எண்ணி நாங்கள் பார்வையாளர்கள் பத்து பேர் இருந்திருப்போம்.) சிறிது நேரம் பேச்சே வரவில்லை.

அடுத்த நாளிலிருந்து, நாங்களும் கதாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், உத்ஸவ் பார்வையாளர்கள் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டு, விருந்தாளிகளைக் கவனித்து உத்ஸவ்வில் இன்னும் நேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.

ஹாபிட்டாட் செண்டரில் உள்ள ஏழு "ரங்குகளில் ஒன்றை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு வந்தது (எனக்குக் கொடுக்கப்பட்ட "ரங்கின் பெயர் - 'கதம்பா'.) சமூக சேவகி ஜெயா அருணாச்சலம், ஹைக்கூ க்ளாஸ் எடுத்த கலா ரமேஷ் என்று பலரை "ன்று தெரிந்துகொள்ளவும், மற்றவர்களுக்கு "றிமுகப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. ஜெயா "ருணாச்சலம் மிடுக்காக வந்து, இதுவரை தனது சமூக அமைப்பு செய்து வரும் பணிகளை, தன்னுடைய அனுபவங்களை அவசரமில்லாமல் தன்னடக்கத்துடன் பகிர்ந்துகொண்டார். ஹைக்கூ பற்றிப் பேச வந்த கலா ரமேஷ் முறையாக சங்கீதம் பயின்றவர். அகன்று விரிந்த கண்களுடன் அவர் நகரத்தைப் பின்னணியாக வைத்து ஹைக்கூ எழுதும் கலையை பயிற்றுவித்த விதமே "ழகு. ஒன்றரை மணி ஒன்றரை நிமிடமாகப் பறந்துவிட்டது.

'ஆசியாவின் பெண்களின் குரல்' என்ற தலைப்பில் பேச வந்த ரஜினி பால்ரிவாலாவை (Rajni Palriwala)ஒரு கல்லூரியின் விரிவுரையாளர் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஹைஸ்கூல் பெண்ணைப் போல் இருந்தார். பளீரென்ற புன்னகையுடன் என்னை சந்தித்தார். அவரது செஷன் முடிந்த போது, இன்னும் ஒரு மணி நேரம் பேசியிருக்க மாட்டாரா என்று ஏங்க வைத்தது.

உள்ளே நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், வெளியே புல்தரை லான்களில் குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நிகழ்ச்சிகள். ஓவியர்களை அழைத்து வொர்க்ஷாப், கதை சொல்லும் அனுபவங்கள், காலிக்ரா·பி, முகத்தில் பெயிண்ட்டால் வரைவது, பப்பெட் செய்வது என்று Amazing Asia Carnivalலில் நடந்துகொண்டிருந்தன. வேறொரு பக்கம் புத்தக வெளியீட்டு விழாக்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம், லாசராவின் குறுநாவல்கள், தமிழ்ப் புதுக்கவிதைகள் என்று தமிழ்ப் புத்தகங்கள் இந்தப் பட்டியலில் அதி முக்கியம்.

மராத்திய கவிஞர் திலிப் சித்ரேவை (Dilip Chitre) சந்தித்தேன். கவிதை என்றால் என்ன என்பதிலிருந்து, தனக்குள் கவிதை எப்படி ஊற்றெடுத்தது என்பதை அழகாக விவரித்தார். மற்ற கவிஞர்களைத் தங்கள் படைப்புக்களை படிக்குமாறு கேட்டார். திபேத்திய கவிஞர் டென்ஸிங் ட்ஸ¤ன்டூவின் (Tensing Tsundue) கவிதை 'தொடுவானம்' அற்புதமாக இருந்தது.

அப்புறம் எகிப்திய மொழிபெயர்ப்பாளர் மோனா பேக்கரின் Translation Workshop. நூதனமாக ஆரம்பித்தார். இஸ்ரேல், பாலஸ்தீனிய சண்டைகளின் போது அங்கிருந்து ஒளிபரப்பட்ட செய்தித்தொகுப்பில், அங்கிருக்கும் அராபியர் ஒருவர் போர் அமளியை விவரிப்பதை எப்படி மொழிபெயர்க்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கினார். ஆரம்பமே எல்லோரையும் எழுந்து உட்கார வைத்தது.

உதாரணத்திற்கு ...

அராபியர் ஒருவர் பதறுகிறார்: "My God, My God, our home is no longer ours."

அமெரிக்காவில் இந்த் வாசகம் மொழிபெய்ர்க்கப்பட்டபோது, செய்தியாளர்கள் அதை இப்படி மொழியாக்கம் செய்திருந்தார்கள், சப்டைடில்களில் : Oh my God, not even Vietnam was as bad as this."

'எங்கள் இடம் அழிந்துவிட்டது' என்பதை மொழிபெயர்க்கும்போது, விய்டநாம் எங்கிருந்து வந்தது? இப்படி மொழிபெயர்ப்பது விதிகளுக்குள் அடங்குமா? அமெரிக்கர்களுக்கு இந்த கலவரத்தின் வீச்சைப் புரிய வைக்க வேண்டுமென்றால், அதற்கு வியட்நாம் மூலமாகத்தான் செல்ல வேண்டுமா?

ஒரு மொழி, ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குத் தாவும்போது அது எப்படியெல்லாம் உருமாறிப் போகிறது. எந்த இடத்தில் அந்த மொழியை நாம் அப்படியே தக்க வைத்துகொள்வது; எங்கே நாம் அதை வேற்றுநாட்டுக்காரர்களும் அறிந்துகொள்ளும்படியாக மாற்றுவது? அப்படி மாற்றினால், அது மொழியாக்கம் ஆகுமா? மொழிபெயர்ப்பாளருக்கு இதில் எவ்வளவு உரிமை உண்டு?

ஒரு மொழிபெயர்ப்பாளர் நினைத்தால், சொல்லப்படும் விஷயத்தை அப்படியே மாற்றி எழுதும் சக்தி அவருக்கு உண்டு.

இன்னொரு சின்ன உதாரணம். (ஆங்கிலத்தில்):

Anwar Sadat: Visionary Who dared (Joseph Finklsestone, 1996), - 1999இல் ஆங்கிலத்திலிருந்து, அரபிக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பு - Wahm Al- Tahaddi (Sadat : The Illusion of Challenge) !

English Original (Finklestone, 1996):

After centuries of living under teh shadow of great powers, often humiliated and derided, Egypt, under Sadat, was grappling with tremendous, almost insoluble problems - inadequate resources, insufficient fertile land and burgeoning population which was increasing at the rate of over one million every year.

அராபிய மொழிபெயர்ப்பு (1999):

Historically, after Egypt had remained for long centuries humiliated and oppressed by the cruelty of the Great Powers, it submitted/surrendered (கவனிக்க) to Sadat's rule. And with Sadat's rule Egypt witnessed numerous large and complex problems, foremost of which were the lack of resources, the limited availability of agricultural land, and the growth of population at a rate of over one million every year.

ஆக, ஒரு மொழிபெயர்ப்பாளர் நினைத்தால் ...

நிற்க. மொழிபெயர்ப்பு உரையாடலில் ஏன் இவ்வளவு அரசியல் நெடி என்று யோசித்தால் - அதை மோனா பேக்கரிடம்தான் கேட்க வேண்டும்.

மூன்று மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடலில் பல சுவாரசியமான கேள்விகள். அதைவிட சுவாரசியமான பதில்கள்.

நம் வட்டார வழக்குச் சொற்களைக் கையாளும் முறையும் அலசப்பட்டது. 'சும்மாடு' என்ற வார்த்தையை (லக்ஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமின் மொழிபெயர்ப்பில்) அப்படியே விட்டிருக்க வேண்டும்; அதை மொழிபெயர்த்திருக்கவே கூடாது என்று வாதாடினார் மங்கை (ஸ்டெல்லா மேரிஸ் ஆங்கில விரிவுரையாளர்). எங்கு எந்த வார்த்தையைப் பிரயோகம் செய்யலாம், எங்கு அது எடுபடாது என்பதில் ஆரம்பித்து, ஒரே விஷயத்தை உரைநடையில் சொன்னால் ஒரு விதம், வசன கவிதை வடிவில் சொன்னால் வேறொரு விதம் என்று அது மாறுவதை மோனா அழகாக எடுத்துக் காட்டினார்.

மூன்றரை மணி நேரம் ஓடியது நினைவிலில்லை.

அடுத்த நாள் இரானிலிருந்து சில ஓவியர்களை சந்தித்தேன் (அவர்கள் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க வேண்டியது; அதை எடுத்து நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்). நம்முடைய ஓவியங்களிலிருந்து அவர்களுடைய வண்ணங்களும், அவர்கள் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் எவ்வளவு மாறுபடுகின்றன. அத்தனை பேரும் எப்படியாவது தங்கள் கருத்துக்களை எங்களிடம் எடுத்துச்சொல்லும் தீவிரத்துடன் பேசினார்கள். ஆங்கிலம் அவர்களுக்குக் கொஞ்சம் தடுமாற்றம்தான். என்றாலும், பேச வேண்டும், மற்ற எழுத்தாளர்கள், ஓவியர்களுடன் பழக வேண்டும் என்ற அவர்களுடைய ஆவல் ... உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் "எங்க ஊர்ல சண்டை நடக்குது, ஆனாலும் நாங்க சந்தோஷமா இருக்கோம்," என்று தட்டுத் தடுமாறி சொல்லும்போது, மனது நெகிழ்ந்துபோய் விடுகிறது.

குறிப்பாக அனாஹிதா தேய்மொரியன் (Anahita Teymourian) என்ற பெண் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டார்.

இறுதியில் எனக்கு ஒரு சிறிய ஓவியத் தொகுப்பை நினைவுப்பரிசாக அளித்தபோது என் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டேன்.

இலங்கை எழுத்தாளர் கே. எஸ். சிவகுமாரன் 'உங்கள் முகங்கள் மறந்துபோனாலும் புகைப்படத்தைக் கொண்டு நினைவு வைத்துக்கொள்வேன்,' என்று காலை முழதும் புகைப்படக் கருவியுடன் காணப்பட்டார். தினமணி அலுவலகத்திலிருந்து திரு. அமுதன், சுப்ரபாரதி மணியன், எழுத்தாளர் இமையம் (இவருடைய 'ஆறுமுகத்'தைதான் இத்தனை நாட்கள் எடிட் செய்துகொண்டிருந்தேன்.) ஆகியோரைச் சந்தித்துப் பேசிய நிமிடங்கள் பொன்னானவை. அப்படியே இரண்டு அஸ்ஸாமிய நடன மாதர்களுடன் பேசிய சில நொடிகளும்.

நம் தமிழ் எழுத்தாளர்கள், தில்லி வாசம் எப்படியிருக்கிறது என்று கேட்டபோது, பெரிய சிரிப்புடன், "ஒரு யுகமாயிட்டது போல இருக்குது," என்றார்கள். (எழுத்தாளர் இமையத்தை உத்ஸவ் முடிந்த பிறகு, கதா அலுவலகத்தில் சந்தித்தேன்.)

2005ம் ஆண்டுக்கான சூடாமணி விருதை விஜய்தான் தேதாவுக்கு வழங்கியதால், அவரை கௌரவிக்கும் முறையில் 'பஹேலி'யைத் திரையிட்டார்கள். (அவர் எழுதிய 'துவிதா' என்ற கதைதான் 'பஹேலி'யாக எடுக்கப்பட்டது.)

ஜனவரி 11ம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடுக்கும் குளிரில் ஹாபிட்டாட் செண்டரிலிருந்து ஹாஸ்டல் திரும்பிய பொழுது, அந்த ஐந்து நாட்களில் சந்தித்த மனிதர்களையும், எடுத்த புகைப்படங்களையும் கிரஹித்த விஷயங்களையும் மனதிற்குள் திரைப்படம் போல ஓட்டிப் பார்த்துக்கொண்டேன். மின்னல் வெளிச்சம் போல சில மின்னின; சில தரையில் கால் வைத்தால் மெல்ல அமுங்கும் கார்ப்பெட் போல இதமாக இருந்தன. எத்தனை புன்னகைகள். எத்தனை விவாதங்கள். எத்தனை மனிதர்கள். எத்தனை அனுபவங்கள்.

நிறைவாக இருந்தது.
|