Shangri - La

Anything under the sun - in Thamizh!

Thursday, August 24, 2006

ஐந்து விரல்

இன்று காலை, வேலை விஷயமாக வெளியே போயிருந்தப்போது, யதேச்சையாக கலைராணியைச் சந்திக்க நேர்ந்தது. படு கேஷுவலாக, பிங்க் கலரில் பான்ச்சோவும் மணி மாலைகளும் அணிந்துகொண்டிருந்தார்.

நான் வந்த வேலையை மறந்து (ஒரு கணம்) "Oh my God!உங்களை இங்க பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை!" என்று சொல்ல, அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்பது நன்கு தெரிந்தது. 'இங்கே யாருக்கு நம்மை அடையாளம் தெரியப்போகிறது?' என்று நினைத்திருப்பார் போலும்.

கலைராணியை எனக்கு 'தேவதை' நாட்களிலிருந்து பிடிக்கும். அந்தப் படத்தில், கீர்த்தி ரெட்டியிடம் அவர் நாட்டுப்புறக் கதை சொல்வார் பாருங்கள் ... கதையில் தலையில்லாத முண்டமாக வரும் இராட்சசன் ராஜகுமாரியைக் காதலிப்பதாக வரும் இடத்தில், தலையின் மேல் புடவைத் தலைப்பை போட்டுக்கொண்டு அவர் நடித்த நடிப்பில் நிஜமாகவே தலையற்ற முண்டம் ஆடுவது போலிருக்கும். படத்தின் அந்தக் காட்சிக்காக நான் காத்திருந்து, ரசித்துப் பார்ப்பேன். Eerie, I tell you. அதுவும் கூத்துப்பட்டறைக்காரர்களின் சிறப்புதான். அவருடைய நடிப்பின் வீர்யத்தைப் பார்த்து அசந்து போனேன். ['பரமார்த்த குரு பார்த்தேன் என்று சொன்னபோது, ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி, "நல்லா இருந்துச்சா?" என்றார்.]

வேலை முடிந்து (நான் வந்த வேலையில் அவரும் சம்பந்தப்பட்டிருந்தார் என்பது பிறகு தெரிந்தது), கிளம்பும் சமயத்தில் திடீரென்று ஆட்டோகிராஃப் வேண்டும் என்று நான் புக்கை நீட்ட, "அய்யோ!" என்று சீட்டில் சாய்ந்தவர்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு சொன்னார் - அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம். அப்புறம் ஐந்து விரல்களை வரைந்து, உள்ளுக்குள்ளே பெரிதாக எழுதிக்கொடுத்தார்.

அதான். தலைப்பில் ஐந்து விரல். Heh.

பி.கு: இன்று சேமியர்ஸில் 'சென்னையில் சினிமா' பற்றி நிகழ்ச்சி.
|

Tuesday, August 22, 2006

இது சென்னை வாஆஆஆரம்!

மெட்ராஸ் வாரம் ஆரம்பமாகிவிட்டது. நேற்று, மெட்ராஸ் மியூஸிங்ஸ் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். டாக்டர் வெங்கடாசலபதியின் உரையைக் கேட்டு அசந்து போனேன். அது இங்கே, ஆங்கிலப் பதிவில்.

தமிழில் எழுத வேண்டும்: ஏழு பக்கங்களை மொழிபெயர்ப்பதென்றால் விழி பிதுங்குகிறது. பார்க்கலாம்.
|