Shangri - La

Anything under the sun - in Thamizh!

Tuesday, January 11, 2005

மறுபடியும்...

ஆளற்ற மாளிகையை நெருங்கும் காலடிச் சத்தம்.

வாசல் கதவு 'க்றீச்' சென்று திறக்கிறது. இரண்டு மாதமாக உபயோகப்படுத்தவில்லையே.

கதவிற்கருகில் சில கடிதங்கள் தரையில் கிடக்கின்றன. 'என்ன ஆளைக்காணோம்?' 'எப்ப வர்றதா உத்தேசம்?' என்று கேள்விகள்.

இரண்டு மாத sabbatical இப்போதுதான் முடிவடைந்திருக்கிறது. உருப்படியாக எழுத விஷயம் சேகரித்துக்கொண்டு (அப்படி எதுவும் அகப்படவில்லையென்றாலும்), மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு மீண்டும் வந்து சேர்கிறேன்.

பி.கு: புத்தகக் கண்காட்சி திறந்து நான்கு நாளாகியும் இன்னும் செல்லவில்லை. இத்தனை வருடங்களில் இது ஒரு அதிசயம். போனால் என்ன வாங்குவதென்று குழப்பமாக இருக்கிறது. ஹ்ம்?
|